மாண்ட் போர்ட் மகத்துவப் பொங்கல் விழா
*பெற்றோர் அனைவருக்கும் மாண்ட் போர்ட் பள்ளியின் வணக்கங்கள்*
நமது பள்ளியில் வருகின்ற *(12.01.2024)* வெள்ளிக்கிழமை அன்று *மாண்ட் போர்ட் மகத்துவப் பொங்கல் விழா* வெகு சிறப்பாக கொண்டாட. உள்ளோம் . இப்பொங்கல் விழாவில் பெற்றோர்கள் தங்களது பங்களிப்பை நல்கி விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்
*பொங்கல் வைத்தல் நிகழ்வு*
இப்பொங்கல் வைத்தல் நிகழ்வுக்காக வகுப்புகள் சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது
*வகுப்பு – ப்ரீ கேஜி முதல் யுகேஜி வரை* (Pre.kg. -Ukg)
*வகுப்பு -1 முதல் 4 வரை* (I – IV )
*வகுப்பு – 5 முதல் 8 வரை* (V – VIII)
*வகுப்பு 9 முதல் 12 வரை* (IX -XII)
தங்களது குழந்தைகள் படிக்கும் வகுப்புகளுடன் பெற்றோர்களும் சேர்ந்து பொங்கல் வைக்கவேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
*பெற்றோர்களுக்கான போட்டிகள்*
*தாய்மார்களுக்கான போட்டி*
*கோலப்போட்டி (ரங்கோலி)*
கலந்து கொள்ள விருப்பமுள்ள பெற்றோர்கள் போட்டிக்குத் தேவையான பொருட்கள் (வண்ணக்கோலப்பொடி கோலப்பொடி .) தாங்களாகவே எடுத்து வர வேண்டும்
கோலப்போட்டிக்கான வழங்கப்படும் நேரம் 45 நிமிடங்கள் மட்டுமே.
ஒரு குழுவிற்கு 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
*உறியடித்தல் போட்டி (தனிநபர் போட்டி)*
*ஆடவர்களுக்கான போட்டி*
*கயிறு இழுத்தல் போட்டி .*
(ஒரு குழுவிற்கு 10 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் )
*உறியடித்தல் போட்டி* *( தனிநபர் போட்டி )*
மேலே கூறப்பட்டப் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயர்களை தங்களது குழந்தைகளின் வகுப்பு ஆசிரியரிடம் வரும் புதன்கிழமைக்குள் ( *10.01.2024)* முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
இப்படிக்கு,
அருட்சகோதரர். சகாய்
முதல்வர்.